பொதுவாக அனைத்துவகையான காய்கறிகளிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. எனவே இந்தப்பதிவில் கோவைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உடலில் சேரும் கெட்ட கழிவுகளை கோவைக்காய் நீக்குகிறது. மசாலா அதிகம் சேர்க்கப்பட்டுள்ள உணவுகள், கடைச் சாப்பாடு இவைகளால் உடலில் கெட்ட கழிவுகள் அதிகரிக்கும். ஆகவே இவற்றினால் உருவாகும் கெட்ட கழிவுகளை நீக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைக்கிறது கோவைக்காய்.
பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்குத் தேவையான மருந்து கோவைப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவைக்காயில் உள்ள beta carotene என்னும் சத்தானது இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது. மேலும் இதில் இரும்புச்சத்து, கல்சியம், Vitamin B1 மற்றும் B2, நார்ச்சத்து போன்றவை உள்ளன.