குளிர்ந்த காலநிலையின் போது சரும அரிப்புக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு இயற்கையான Moisturizer ஆகும். இது வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
மேலும், இது பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. குளிர்ந்த காலநிலையில் உணர்திறன் வாய்ந்த சருமம் உட்பட அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாக தேங்காய் எண்ணெய் அமைகிறது.
குளிர்ந்த காலநிலையில் ஏற்படும் நீரிழப்பைக் கட்டுப்படுத்த சருமத்தை ஈரப்பதமாக்குவது அவசியமாகும். இதற்கு குளித்த உடனேயே நறுமணம் இல்லாத Moisturizer ஐ பயன்படுத்தலாம். இதன்மூலம் ஈரப்பதத்தை அடைக்கலாம். இவை சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
எலுமிச்சை மற்றும் சர்க்கரை நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஓட்ஸ் குளியல் இயற்கையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டதாகும். இது சரும எரிச்சலைத் தணிக்க உதவுகிறது.
கற்றாழை ஜெல்லில் உள்ள சருமத்தை ஆற்றும் பண்புகள் வீக்கமடைந்த சருமத்தை அமைதிப்படுத்தவும், அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி சருமத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம்.