இந்த நேரத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல்,பல அறிகுறிகள் உங்கள் சருமத்தில் தோன்றத் தொடங்கும்.
இந்த வயதில், உடலில் நீரேற்றத்தை பராமரிப்பது, சரியான தோல் பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்வது மற்றும் சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
சரியான நேரத்தில் சரியான கவனிப்பு உங்கள் சருமத்தை இளமையாகவும் நீண்ட காலத்திற்கு பளபளப்பாகவும் வைத்திருக்க முடியும். அந்தவகையில் 30 வயதை தாண்டியவுடன் சருமத்திற்கு என்ன செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேன் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும்.இதனை நேரடியாக முகத்தில் தடவி 15-20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.இது சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.மேலும் ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும்.
பச்சை பால் சருமத்தை தெளிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி மென்மையாக்குகிறது.
பாதாம் எண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, ஊட்டச்சத்தை அளிக்கிறது.இரவு தூங்கும் முன் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். இதனால் உங்கள் சருமம் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அரிசி மாவு மற்றும் பால் கலந்து Facemask தயார் செய்யவும்.இதனை முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவவும்.இது சருமத்தை இறுக்கமாக்கி இயற்கையான பொலிவை அளிக்கிறது.
இப்படி சரியான வீட்டு வைத்தியம்,தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் சீரான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம்,உங்கள் சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் நீண்ட காலத்திற்கு வைத்திருக்க முடியும்.