நாசாவின் Parker விண்கலமானது (Nasa's Parker) சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது.
இது சூரியனில் இருந்து 3.8 மில்லியன் மைல்கள் அருகில் சென்று இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த விண்கலமானது, லாக்ஹீட் மார்ட்டின் ஜெட் போர் விமானத்தின் உச்ச வேகத்தை விட சுமார் 300 மடங்கு வேகமானது என தெரிவிக்கப்படுகிறது.
Parker சோலார் விண்கலமானது சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் உள்ள கொப்பளிப்பு வெப்பத்தைக் கடந்து பறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளி கோளில் உள்ள புவியீர்ப்பு விசைகளின் உதவியின் மூலம் குறித்த வின்கலம் இந்த சாதனையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சூரியன் தொடர்பில் அறிய, குறிப்பாக, 1,800 Degree Fahrenheit (980 Degree Celsius) வெப்பநிலையிலும் தரவுகளை விண்கலம் சேகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.