'ஈரம்' மற்றும் 'குற்றம் 23 ' ஆகிய திரைப்படங்களின் மூலமாக இரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் அறிவழகன்.
அத்தோடு சமீபத்தில் இவர் இயக்கிய 'தமிழ் ரொக்கர்ஸ்' என்ற வெப்சீரிஸ் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்ற நிலையில் அருண் விஜய் நடிப்பில் இவர் இயக்கிய 'Border ' திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
இதேவேளை அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சப்தம்’ திரைப்படம் பெப்ரவரி 28 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் ஆதியுடன் நடித்துள்ளனர்.