இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார்.
ஏ.ஆர். முருகதாஸ் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்.கே. 23 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், Bollywood நடிகர் சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் 'சிக்கந்தர்' என்ற ஹிந்தி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இத் திரைப்படம் அடுத்தாண்டு ரமழான் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் Teaser ஐ இன்று முற்பகல் 11.07 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்தினால் இன்று Teaser வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Teaser ஐ எதிர்பார்த்துக் கொண்டிருந்த சல்மான் இரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.