அடுப்பில் ஓர் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி சூடேறியதும்,
சோம்பு- அரை தேக்கரண்டி ,
சிறிய துண்டு பட்டை- ஒன்று ,
புதினா இலைகள்- பத்து
என்பனவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
அவை சூடேறியதும் அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆறவைத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக ஒரு போத்தலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து வைத்தால் பத்து நாட்கள் வரை கெட்டுப்போகாது.
அரிசி மா,கடலை மா, பச்சை பயறு மா மற்றும் கோதுமை மா இவற்றில் வீட்டில் எது உள்ளதோ அதனை எடுத்துக்கொள்ளலாம். அதனை தேவையான அளவு ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மாவுடன் நாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் தண்ணீரைக் கலந்து, வாரத்தில் இரண்டு தடவைகள் முகத்தில் பூசிக்கொள்ளலாம்.
கழுத்து மற்றும் முகத்தில் இரண்டு தடவைகள் கூட பூசிக்கொள்ளலாம். பின்னர் இருபது நிமிடங்களின் பின்னர் நன்கு காய்ந்ததும் தண்ணீரால் முகத்தை நனைத்து ஐந்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவாகும்.
முகத்தில் காணப்பட்ட கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை எல்லாம் படிப்படியாக குறைந்துவிடும். எனவே மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சருமத்தைப் பாதுகாப்போம்.