Metta நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், தற்போது WhatsApp செயலி உள்ளேயே Document Scanning வசதியை அறிமுகம் செய்துள்ளது.தற்போது முதல்கட்டமாக ஆப்பிள் I.O.S பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், தற்போது ஆவணங்களை Scan செய்யும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை Scanற்கு பயன்படுத்த தேவையில்லை.
WhatsApp இல் Scan செய்து அப்படியே மற்றவர்களுக்கு ஆவணங்களை அனுப்பலாம். தற்போது I.O.S பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படும் நிலையில், விரைவில் Android பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.