தூதுவளைக் கீரை அல்லது தூதுவளை என்பது ஒரு வகையான மூலிகையாகும்.
குறிப்பாக, சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தூதுவளை மிகுந்த நன்மைகளை அளிக்கிறது. சளி மற்றும் இருமலைப் போக்க உதவும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாக தூதுவளை பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே சளி, இருமல் நோய்களைப் போக்க உதவக்கூடிய சிறந்த தேர்வாக தூதுவளை அமைகிறது.
முக்கியமாக தூதுவளை நீரிழிவுக்கு மாமருந்தாக செயல்படுகிறது. அத்துடன் தினசரி தூதுவளையின் சில இலைகளை மென்று தின்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும். மேலும் தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடல் பலம் வலுக்கொடுக்கும். தூதுவளைப் பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும்.
நுளம்புகளை இயற்கையான முறையில் விரட்டுவதற்கு தூதுவளைச் சாறு உதவியாக அமையும். அதன்படி, தூதுவளைச் சாற்றை நம் உடலில் தடவிக் கொள்வதன் மூலம் மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகளை நெருங்க விடாமல் விரட்டலாம்.