குறிப்பாக பெண்கள் முகத்தை பொலிவாக்க வேண்டும் என அதிகமாக நேரத்தையும்,பணத்தையும் செலவுசெய்கின்றனர்.
ஆனால் குறைந்த செலவில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு எமது முகத்தைப் பொலிவாக்க முடியும்,அவை எவையென இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒரு கரண்டி கடலைமா மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக தயாரித்து அதனை முதகத்தில் தடவி 15 நிமிடங்கின் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் உடனடி பொலிவு பெறும்.
வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு கரண்டி தயிர் சேர்த்து அதனை பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் உலரவிட்டு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினாால் முகம் உடனடியாக பொலிவு பெறும்.
இரண்டு கரண்டி வெள்ளரி சாறு மற்றும் தர்பூசணி சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பின்னர் 1 கரண்டி தயிர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவிட்டு கழுவினால் உடனடியான மாற்றத்தை கண்கூடாக பார்க்கலாம்.