நடிகர் அஜித் குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் “விடாமுயற்சி”. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதுடன் ஆரவ், அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் Teaser வெளியான நிலையில், இப்படத்தின் First Single சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேலும் , “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு Release ஆகாது என இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் அஜித் இரசிகர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர்.
ஆனாலும் இத்திரைப்படத்தின் Trailer இன்று வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதனால் தல இரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் Release திகதியை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.