குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. குடைமிளகாய் காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காயாகும். இதில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைவாகவும் உள்ளன. குடைமிளகாயைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.
குடைமிளகாயில் விட்டமின் ஏ,பி,சி,கல்சியம், பஸ்பரஸ், இரும்புச் சத்துக்கள் என்பன நிறைந்துள்ளன. இந்த குடைமிளகாய் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவற்றை குணமாக்க பயன்படுகிறது.
பல்வலி, மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தியும் குடைமிளகாயில் உள்ளது.
புற்றுநோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டைக் குறைக்கும் சக்தி குடைமிளகாயில் உள்ளது.
இந்த குடைமிளகாய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்தும். இதில், கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், உடல் எடை சீராகப் பேணப்படும்.
எனவே நமது அன்றாட உணவில் இந்த குடைமிளகாயை சேர்த்து உட்கொண்டு, ஆரோக்கியத்தினை மேம்படுத்திக்கொள்வோம்.