உடல் பருமன், நீரிழிவு நோய், இரத்த சோகை, இதய நோய்கள், மூட்டு வலி, கல்லீரல் தொடர்பான நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு முருங்கைக் கீரை மிகவும் நல்லது.
சிலருக்கு உடலில் உள்ள வெப்பத்தால் வாயில் காயம் வரும். இந்த காயத்திற்கு முருங்கை இலையை உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. காயம் விரைவில் குணமாகும்.
முருங்கை இலையை சாப்பிடும்போது சருமத்தில் வரும் சுருக்கங்கள் விரைவில் குறையும். சருமப் பிரச்சினைகளுக்கு ஏற்றது.
முருங்கை இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து கொஞ்சம் மிளகு, உப்பு சேர்த்து அருந்தினால் மலச்சிக்கல் முடிவுக்கு வரும்.
தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள பெண்களுக்கு முருங்கை இலையை சமைத்து கொடுக்கலாம். இதனால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாக வாய்ப்புள்ளது.
இவ்வாறன நன்மைகளைக் கொண்ட முருங்கைக் கீரையை உட்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மையினைப் பெற்று ஆரோக்கியமாக வாழுங்கள்.