WhatsApp தற்போது Google இன் உதவியுடன் போலியான செய்திகள் மற்றும் பொய்யான தகவல்களைக் கண்டுபிடிப்பதில் முயற்சி எடுத்து வருகிறது.
Android பயனர்களுக்கு Google இல் Imageகளை தேடுவதை Reverse செய்வதற்கான திறனை Android சோதித்து வருகிறது.
தற்போது இதையே WhatsApp Web Version இல் சோதனை செய்து வருகிறது.
இதற்கு முன்பு WhatsApp எந்த ஒரு சோதனையும் இல்லாமல் Content, Imageகள் மற்றும் Videoக்களை பிறருக்கு Forward செய்வதற்கு அனுமதித்தது.
இதனால், போலியான மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடிய விடயங்கள் பிறருக்கு Share செய்யப்படுகிறது.
ஆனால் இந்தக் கருவியை பயன்படுத்தி, நீங்கள் போலியான Content அல்லது Imageகளை அடையாளம் கண்டு, அவற்றின் உண்மையைக் கண்டறியலாம்.