பல ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. இதனை தினமும் உடலில் சேர்த்துக் கொள்வதனால் பல நன்மைகள் உடலுக்குக் கிடைக்கின்றது.
ஒலிவ் காய்களில் இருக்கும் பினோலிக் கலவைகள் பல வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், தடுப்பதற்கும் சிறப்பாக செயற்படுகின்றன.
ஒலிவ் சாப்பிடுவது உங்கள் சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆரோக்கியமான கூந்தலுக்கு, நீங்கள் ஒலிவ் எண்ணெயை உணவில் சேர்த்து உட்கொண்டு அதன் எண்ணெயை உங்கள் தோல் மற்றும் கூந்தலில் தடவலாம்.
ஒலிவ் காய், உப்பு கொலஸ்ட்ரோல் போன்ற கடுமையான பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும், அனைத்து வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை குணப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது தவிர செரிமான கோளாறுகளில் இருந்து உடலைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், உடலில் காணப்படும் எந்த வகையான வீக்கத்தையும் எளிதாகக் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.