கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'Love Action Drama '. இந்தத் திரைப்படத்தில் நிவின் பாலி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் சந்தீப் குமார், ஜோர்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து இயக்கும் புதிய திரைப்படத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
நிவின் பாலி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'Dear Student' திரைப்படத்தின் First Look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.