இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட போர்டர் - கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி, அதன்பின் மீண்டு வந்து தொடரை 3:1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் போர்டர் - கவாஸ்கர் கிண்ணத்தை வென்று அவுஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.
போர்டர் கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் 1:0 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த நிலையில், தொடரை 3:1 என கைப்பற்றியது பாராட்டுக்குரிய விடயமாகும்.
எனவே, போராடி போர்டர் கவாஸ்கர் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துகள் என சச்சின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.