தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இந்திய சினிமாவில் முக்கிய நடிகராகத் திகழ்ந்து வருகிறார்.
சமீபத்திய இவருடைய திரைப்படங்களுக்கு இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த 'புஷ்பா' திரைப்படம், தெலுங்கு சினிமாவைத் தாண்டி இந்திய சினிமாவில் பெரிதும் வசூலித்ததால் 'புஷ்பா 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே பெரிதும் அதிகரித்தது. இந்தப் படம் அந்த எதிர்பார்ப்புக்களையெல்லாம் பூர்த்தி செய்து இதுவரை உலகளவில் இந்திய மதிப்பில் 1,800 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்திருக்கின்றது.
ஹிந்தி சினிமாவில் பிறமொழிப் படங்கள் அதிகமாக வசூலிப்பது கடினமாக இருந்துவந்த சூழ்நிலையில் அதையெல்லாம் தகர்த்தெறிந்து 'புஷ்பா 2' திரைப்படம் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே ஹிந்தியில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதுவரை ஹிந்தியில் மட்டும் இந்திய மதிப்பில் 806 கோடி ரூபாய்களை 'புஷ்பா 2' திரைப்படம் வசூலித்துள்ளது.