தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக இருந்தாலும் சர்ச்சை நாயகியாக அறியப்பட்டவர் தான் நடிகை அமலா பால்.
அமலாபால் திருமணமாகி விவாகரத்துக்குப் பின்னர் திரையுலக வாழ்க்கையில் சரிவை சந்திக்கத் தொடங்கினார்.
இவர் கதையின் நாயகியாக நடித்த,ஆடை திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டாலும் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்தது.
இதன் காரணமாக, அமலா பால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், இதற்காக ஆன்மீகப் பாதையைத் தேர்வு செய்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஜகத் தேசாய் என்பவரைக் காதலித்துவந்த அமலா பால் அவரை 2025 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அமலா பால் - ஜகத் தேசாய் தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில்,அவருக்கு இலை என பெயர் சூட்டினர்.
அவ்வப்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது தன்னுடைய குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறன.