கிழங்கு வகைகளில் கண்ணைக்கவரும் வகையில் உள்ள கரட்டில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. கரட்டை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், கண்களில் எவ்வித பிரச்சனைகளும் வராமல், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
தினமும் ஒரு கரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம். அத்துடன் குடலில் காயம் வராமல் தற்காத்துக்கொள்ளவும் முடியும். கரட் சாற்றுடன், எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும். இதில் பொட்டாசியம், Vitamin A, C, beta carotene மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
மாதவிடாயின் போது வெறும் வயிற்றில் கரட்டை உட்கொள்வது குடல்களை சுத்தப்படுத்த உதவுவதோடு, இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் உதவுகின்றது.