தக்காளியில் எண்ணற்ற சத்துகள், விட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக விட்டமின்(A ) அதிகமாக அடங்கியுள்ளதால், கண் பார்வையை மேம்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. அந்த வகையில் மரத்தக்காளியின் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மரத்தக்காளியானது சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றலைக் கொண்டது. இதில் விட்டமின் (E, D ) அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த மரத்தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றில் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்களைக் கட்டுப்படுத்த முடியும்.
மரத்தக்காளியானது இருதயத்தின் செயற்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. மரத்தக்காளியின் வேரானது மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகின்றது.
மரத்தக்காளியுடன் தேங்காய் சேர்த்து கூட்டுப்போல செய்து சாப்பிட்டு வந்தால், குடல் காயம், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும். மரத்தக்காளி வத்தலானது வாந்தியைப் போக்கி பசியை ஏற்படுத்தும்.
உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மரத்தக்காளியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடற்சூடு குறையும். அத்துடன் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மரத்தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.