திரைத்துறையில் ஒரு நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக பரிணாமம் எடுத்திருப்பவர் தனுஷ். இந்திய சினிமாவைத் தொடர்ந்து ஹொலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' திரைப்படம் அவரது படத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது.
இந்த ஆண்டு நடிகர் தனுஷின் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படங்களுக்கும் அதேபோன்று அவரது நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படங்களுக்கும் இரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
அந்த வகையில், தனுஷ் இயக்கத்தில் 3 ஆவது திரைப்படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 7ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இதனையடுத்து, தனுஷ் இயக்கத்தில் 4 ஆவது திரைப்படமாக 'இட்லி கடை' திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படம் April மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
அடுத்து, சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'குபேரா' இத்திரைப்படம் இந்த வருடம் June மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
அத்துடன், "இசைஞானி" இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படமொன்றில் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவுள்ளதாகவும் . இத்திரைப்படம் இந்த வருடம் October மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.