அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு ஆராய்ச்சிகளை இஸ்ரோ செய்து வருகின்றது.
இதற்காக விண்ணில் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-60 ரொக்கெட்டின் இறுதி பகுதியான PSLV Orbital Experimental Module எனும் பரிசோதனை முயற்சிக்காக 24 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
இவை புவியை வலம் வந்தபடி அடுத்த சில மாதங்களுக்கு விண்வெளி ஆய்வு மையத்திற்குத் தேவையான செயற்கை நுண்ணறிவு, உயிரியல் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளன.
இஸ்ரோ அனுப்பி வைத்த Moduleஇல், சிறிய பயிர்களின் விதை, அது முளைக்கத் தேவையான மண், ஹெர்மெட்டிலி சீல் செய்யப்பட்ட யூனிட், வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வாயு பரிமாற்றத்தை அளவிட சென்சார்கள், பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு ஏற்ற ஹைட்ரோபோனிக் அமைப்புகள், விதைக்கு தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்தை கொடுக்க தானியங்கி அமைப்பு, விதையின் வளர்ச்சியை கண்காணிக்க உயர்திறன் கொண்ட கெமரா , விதை செடியாக முளைத்தால் அதை அளவிட ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன.
இவ்வளவும் சேர்த்து அனுப்பி வைக்கப்பட்ட விதை தற்போது முளைத்திருக்கிறது. இதற்கான ஆதாரமாக புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டிருக்கின்றது.
இந்திய விண்வெளி வரலாற்றில், விண்வெளிக்கு அனுப்பி வைத்த விதை ஒன்று விண்வெளியில் முளைத்திருப்பது இதுவே முதல்முறையாகும்.