பல்வேறு நாடுகள் இப்போது நிலவு தொடர்பான இந்தத் திட்டத்தை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், நிலவில் துல்லியமான மற்றும் நிலையான நேரம் அளவிடுவது முக்கியமானதாக உள்ளது.
அண்மையில் பூமியுடன் ஒப்பிடும்போது சந்திரனில் நேரம் எவ்வாறு வித்தியாசமாக செயற்படுகிறது என்பதை ஆராய்ந்தனர்.
சந்திரனில் உள்ள கடிகாரங்கள் பூமியில் உள்ளதை விட ஒவ்வொரு நாளும் 56 மைக்ரோ விநாடிகள் வேகமாக இயங்குகின்றன என்று கண்டறிந்தனர்.
சந்திரனின் பலவீனமான ஈர்ப்பு, கடிகாரங்களை வேகமாகச் சுழலச் செய்கிறது. அதேவேளை பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் அதன் இயக்கம் அவற்றை சிறிது குறைக்கின்றது.
விண்வெளி வீரர்கள், ரோவர்கள் மற்றும் தரையிறங்குபவர்கள் தங்கள் நிலைகளை 10 மீட்டருக்குள் துல்லியமாகச் சுட்டிக்காட்ட வேண்டும்.
இதன் அர்த்தம், சிறிய நேரப் பிழைகளும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். நிலவில் எல்லாம் சீராகச் செல்ல துல்லியமான நேரக் கட்டுப்பாடு அவசியம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.