இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் ரிலீஸ் திகதியில் மாற்றம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது. இதேவேளை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் Running Time இணை கொண்டுள்ள இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில வார்த்தைகள் மட்டும் நீக்கப்பட்டு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தத் திரைப்படம் இம்மாதம் 30 ஆம் திகதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.