நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்காமல் விரும்பிய உணவுகளை விரும்பிய நேரத்தில் சாப்பிடுவதும், முதுமையில் வர வேண்டிய நரை இளமையிலேயே வந்துவிடுவதற்கு ஒரு வகையில் காரணமாக உள்ளது.
இளநரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி? அதனை தடுப்பதற்கான எளிமையான வழிமுறைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்வோம்.
கூந்தலை இளமையாக வைத்துக்கொள்ள, இளநரை இல்லாமல் பாதுகாத்துக்கொள்ள,நெல்லிக்காய் சிறந்த தேர்வாக அமையும். நெல்லிக்காயை நன்கு அரைத்து, சாறு பிழிந்து அதே அளவுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இவை மூன்றையும் சேர்த்து நன்கு காய்ச்சி, தினமும் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால், இளநரை வராமல் தடுக்கலாம். தலையில் ஆங்காங்கே ஓரிரு இள நரை முடிகள் இருந்தால் அதன் மீதும் தடவி வரலாம்.
மூங்கில் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் இரண்டு வார காலம் வரை ஊற வைத்து, அந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், நரை இல்லாத முடி நிச்சயம் கிடைக்கும்.
வெந்தயம், சீரகம், வால்மிளகு இந்த மூன்று பொருட்களையும் எடுத்து, நன்கு பொடி செய்து, அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால், இளநரை உடனே மறையும்.
தினமும் பல வகையான கீரை வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். அந்தவகையில் கரிசலாங்கண்ணி கீரையை நன்றாக அரைத்து, அதிலிருந்து சாறும் எடுத்து அதை அப்படியே தேங்காய் எண்ணெய்யில் கலந்து காயவைத்து தேய்த்து வந்தால், கருமை மாறா கூந்தலைப் பெற முடியும்.