நடிகர் அஜித் குமார் 'குட் பேட் அக்லி ' மற்றும் 'விடாமுயற்சி' ஆகிய திரைப்பட வேலைகளை முடித்துவிட்டார். ஒரே சமயத்தில் இரு திரைப்படங்களில் நடித்து வந்த அஜித் இத்திரைப்படங்களின் படப்பிடிப்புகளையும் முடித்து டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார்.
அத்துடன் நடிகர் அஜித் தற்போது கார் பந்தயத்தில் பல வருடங்கள் கழித்து கலந்துகொண்டிருக்கின்றார். இந்த விடயம் அவருடைய இரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கார் பந்தய பயிற்சியின் போது இவருக்கு சிறிய விபத்து ஏற்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக அஜித் எந்த வித காயமும் இன்றி தப்பித்தார்.
இந்தநிலையில் அஜித்திடம் திரைப்படங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், கார் பந்தயம் நடக்கும் வரை நான் திரைப்படங்களில் நடிக்கப்போவது இல்லை என கூறியுள்ளார்.