நடிகர் மணிகண்டன் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான 'Good Night ' மற்றும் ' Lover ' ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் 'குடும்பஸ்தன்' திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது நகைச்சுவையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு வைசாக் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ரிலீஸ் திகதியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் இம்மாதம் 24 ஆம் திகதி வெளியாகவுள்ளது.