ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை' இந்தத் திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் Trailer அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள' பேபி சிக்கு சிக்கு'என்ற பாடலின் Lyrics வீடியோ இன்று வெளியாகியுள்ளது.