ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் தேனுடன், 1 எலுமிச்சைச் சாற்றினை பிழிந்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் சருமத்தைக் கழுவ வேண்டும்.
எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதன் சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை சருமம் முதல் கழுத்து பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து,பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சைச் சாறில் தயிர் சிறிது சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் கழுவ முகத்தின் கருமை நீங்கி பொலிவாகவும் நிறமாகவும் மாற ஆரம்பிக்கும்.
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி காய விடுங்கள். பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
வாரத்திற்கு இரண்டு தடவை மேற்குறிப்பிட்டுள்ள முறையை பின்பற்றி செய்து வந்தால்,சருமத்தை பொலிவாகவும்,நிறமாகவும் வைத்துக்கொள்ளலாம்.