தமிழ் சினிமாவில் 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதன்பின்னர் கதாநாயகனாக நடித்து 'Love To Day' திரைப்படத்தை இயக்கினார். இப்படமும், இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'Love Insurance Kompany' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக, 'ஓ மை கடவுளே' திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ' Dragon ' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தில்,விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடலான 'Rise Of Dragon' என்ற பாடல் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் 2-ஆவது பாடலான 'வழித்துணையே' என்ற பாடல் இன்று மாலை 6 .00 மணிக்கு வெளியாகவுள்ளது.