வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய நீராகாரம் என்றால் பழஞ்சோறு தான். பழஞ்சோற்றின் பலன்கள் மற்றும் மகத்துவத்தை உணர்ந்து இன்று அதன்மீது பலரின் பார்வை திரும்பியுள்ளது.
பழஞ்சோறு, நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழஞ்சோறு உண்ணும் பழக்கம், நம் பாரம்பரியத்திற்கு உண்டு.
பழைய சோறு இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். அப்படியான பழஞ்சோற்றில் எத்தனையோ மருத்துவக்குணங்கள் உள்ளன. அதை நாம் தெரிந்து கொள்வோம்.
பழஞ்சோறு உண்பதால் புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.
உடலுக்கு நன்மை தரும் Bacteria அதிகளவில் பழஞ்சோற்றில் இருக்கின்றன. ஆகவே, காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாவதோடு உடல் வெப்பத்தையும் போக்கும்.
ஒவ்வாமைப் பிரச்சினைகளுக்கும் மற்றும் தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வைத் தரும்.
பழஞ்சோற்றில் நார்ச்சத்து இருப்பதால், வயிற்றுப் புண், மலச்சிக்கல் மற்றும் உடல் சோர்வு போன்றவற்றைத் தடுக்கும்.
இந்த உணவை நாம் காலையில் உண்பதால், இரத்த அழுத்தம் சீராகி, முழு நாளும் நம்மை புத்துணர்ச்சியோடு இருக்க வைக்கும்.