அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Grok AI என்ற புதிய செயலியானது, பயனர்களுக்கு ஒரு புதிய அளவிலான உரையாடல் மற்றும் படைப்பாற்றல் அனுபவத்தை வழங்குகிறது.
படங்களை உருவாக்குதல், உரையை சுருக்குதல், கேள்விகளுக்கு பதிலளித்தல் போன்ற பல்வேறு பணிகளை எளிதாக செய்து முடிக்க உதவுகிறது.
முன்னதாக, எக்ஸ் தளத்தின் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்த இந்த ஏஐ உதவியாளர் வசதி தற்போது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கிறது.
Grok AI மற்ற ஏஐ மொடல்கள் எதிர்கொள்ளும் சவாலான தகவலின் துல்லியம் மற்றும் பட உருவாக்கம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.
தற்போது, Grok AI ஆனது குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளில் மட்டுமே கிடைக்கிறது. IOS பயனர்களுக்கு மட்டுமே அணுகக்கூடியதாக இந்த அம்சம் உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் இந்த அம்சம் பல நாடுகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.