தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று இரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் தான் நடிகர் தனுஷ். எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதற்கேற்றால் போல் தன்னை மாற்றிக் கொண்டு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் கைதேர்ந்தவராவார்.
இதனாலேயே, நடிகர் தனுஷ் இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வாங்கியிருக்கிறார். அந்த இரு விருதுகளும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அவருக்குக் கிடைத்ததென்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற திரைப்படங்கள் இரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களாகும்.
இதன்பின் இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விடுதலை 2' திரைப்படத்தை தயாரித்த 'RS Infotainment' என்ற தயாரிப்பு நிறுவனம் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியை உறுதி செய்வதாகத் தங்களது X தளப் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
ஆகவே, நடிகர் தனுஷ் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்து இன்னுமொரு புதிய சினிமா அனுபவத்தைக் கொடுப்பார்கள் என்று இரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.