புத்தாண்டில் புதிய பட்ஸ்களை, Noise Earbud's 6 என்ற பெயரில் கொண்டுவந்துள்ளது. இந்த பட்ஸ்கள் பிராகி என்ற ஜெர்மன் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளன.
சிறந்த Audio அனுபவத்தை வழங்கும் முகமாக இந்த நிறுவனம் பல சிறப்பான மேம்பட்ட அம்சங்களுடன் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பட்ஸ்கள் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலேஷனை (ANC) ஆதரிக்கின்றன. இது 32db வெளிப்புற சத்தத்தை தடுக்க உதவுகிறது.
ஒருமுறை Charge செய்தால் 50 மணி நேரம் பயன்படுத்த முடியும். இன்ஸ்டாசார்ஜ் தொழில்நுட்பத்தின் காரணமாக, 10 நிமிடங்கள் Charge செய்தால், 150 நிமிடங்களுக்கு அதாவது இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. இதில் USB டைப்-C போர்ட் உள்ளது.