உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பேரிச்சம் பழம்.
குறிப்பாக குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாக படுவதால், உடலில் விட்டமின் D உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலுச் சேர்க்க விட்டமின் D பெரிதும் உதவுகிறது. எனவே பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் உறுதியாகும்.
மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒருவேளை உங்களுக்கு சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் அல்லது வேறு ஏதேனும் செரிமான பிரச்சினைகள் இருப்பின், பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வர, அதில் உள்ள நார்ச்சத்து இப்பிரச்சினைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.