இயக்குநர் வெற்றிமாறன் தமிழ் திரைத்துறையில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர்களில் ஒருவர்.
அந்த வகையில், வெற்றிமாறன் இயக்கும் ' வாடி வாசல் ' திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்திற்காக ஜல்லிக்கட்டு வீரர்களுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் வீடியோவை 2024 ஆண்டு படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
ஆனால் இதுவரைக்கும் ' வாடி வாசல் ' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், ' வாடி வாசல் ' திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளார். அவர் தன்னுடைய X தளப் பக்கத்தில்
" அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது " என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் 'வாடி வாசல்' திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் 'வாடி வாசல்' திரைப்படம் குறித்து கலைப்புலி எஸ். தாணு போட்ட பதிவால் இரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
'வாடி வாசல்' திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி புதிய திரைப்படமொன்றில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.