இதேவேளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் திகதி மாலை 'ஜெயிலர் 2 ' திரைப்படத்தின் Promo Video வெளியானது. இந்த வீடியோ இதுவரை 11 மில்லியன் பார்வைகளைக் கடந்து முன்னிலை வகிக்கிறது. அதேவேளை ஆரம்பத்தில் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
ஆனால், தற்போது நயன்தாரா ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால் அவருக்குப் பதிலாக "இறுகப்பற்று" திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.