திரைத்துறையில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்தவர் விஜய் அன்ரனி.
அதன் பிறகு ஒரு பாடகராக மற்றும் நடிகராக இப்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர் லியோ ஜோன் போல் இயக்கும் `ககன மார்கன்' திரைப்படத்தில் நடிகர் விஜய் அன்ரனி நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் விஜய் அன்ரனி , உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ககன மார்கன் என்றால், சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருள். இப்படத்திற்கு விஜய் அன்ரனியே இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாடலான ‘சொல்லிடுமா’ என்ற வீடியோப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விஜய் அன்ரனி பாடியுள்ளார்.
இத்திரைப்படம் விரைவில் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி , மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.