உருளைக்கிழங்கை காய்கறிகளின் அரசன் என்று குறிப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான காய்கறிகளில் உருளைக்கிழங்கும் ஒன்று. இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.
உருளைக்கிழங்கு carbohydrate களின் சிறந்த ஆதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உருளைக்கிழங்கில் இதைத் தவிர ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் பொட்டாசியம், துத்தநாகம், சோடியம், கல்சியம் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. மேலும், இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் Vitamin C ஆகியன எமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடியவை.
அத்துடன் உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.