இந்தியாவில் நடைபெற்றுவரும் Auto Expo 2025-இல் 6 இருக்கைகள் கொண்ட பறக்கும் Taxi அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த Taxi ஒரே நேரத்தில் 160 கி.மீ தூரம் வரை பறக்கக்கூடியது, ஆனால் இது 20-30 கி.மீ குறுகிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இது வெறும் 20 நிமிடங்களில் பயணத்திற்குத் தயாராகிவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த Taxi நெரிசலான பகுதிகளில் பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் பைலட் உட்பட 7 பேர் அமர முடியும்.
2028-ஆம் ஆண்டில் பெங்களூருவில் இருந்து பறக்கும் Taxi சேவை தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மும்பை, டெல்லி, நொய்டா, புனே போன்ற நகரங்களுக்கு ஏர் Taxi சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.