இந்தச் செடியின் பூக்கள் அதிக தேன் சுவை கொண்டவை. சுமார் 8 அடி உயரம் வரை வளரக்கூடிய இந்தச் செடியின் பூ, காய் மற்றும் இலை அனைத்துமே நமக்கு ஏராளமான மருத்துவக் குணங்களை அள்ளித் தருகின்றன.
உண்ணிச் செடியை எமது இல்லத்தின் நுழைவாயிலில் வைப்பதன் மூலம் நுளம்புகள் வீட்டுக்குள் வராது, ஏனென்றால் நுளம்புகளுக்கு உண்ணிச் செடியின் வாசனை பிடிக்காது. இதனால் நுளம்புகள் வீட்டுப் பக்கமே வராது.
உண்ணிச் செடியின் இலையை அரைத்து உடலில் உள்ள காயம், மற்றும் நாற்பட்ட காயங்களில் பத்துப் போடுவதன் மூலம் எளிதில் குணப்படுத்திக்கொள்ள முடியும். அத்துடன் சொறி, சிரங்கு ஆகியவற்றிலிருந்து விடுபடவும் உண்ணிச்செடி உதவுகின்றது.
உண்ணிச் செடியின் பூக்கள் இனிப்பாக இருப்பதன் காரணமாக அதனை கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் காச நோயைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். மேலும் நுரையீரலுடன் தொடர்புடைய நோய்களுக்கும் சிறந்த நிவாரணி. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
மூட்டு வலியினால் அவதியுறுவோர், உண்ணிச் செடியின் இலையை மூட்டு வலி உள்ள இடத்தில் அரைத்து தடவி வருவதன் மூலம் மூட்டு வலி விரைவில் குணமடைந்துவிடும்.
சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்ட உண்ணிச் செடியானது எமது உடலுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் சிறந்த பலன்களைத் தரக்கூடியது.