தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிலம்பரசன். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தில் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சிம்பு February 3 ஆம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "மன்மதன்" திரைப்படம் மீண்டும் Re - Release செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2004 ஆம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'மன்மதன்' திரைப்படம் Re - Release செய்யப்படவுள்ளமையினால் இரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.