இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் பிரபல பொலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்,கங்குலியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திறமையான பொலிவுட் நடிகர்களுள் ஒருவரான ஆயுஷ்மான் குரானா குறித்த திரைப்படத்தில் கங்குலியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும், தற்போது மீண்டும் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பல விருதுகளை வென்ற பொலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் கங்குலி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.