Instagramஇல் ஏற்கனவே நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு வசதியை WhatsApp விரைவில் தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தவுள்ளது.
WhatsApp மூலம் அடிக்கடி Status வைக்கும் Status பிரியர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த Update கட்டாயம் உங்களுக்கானதுதான்.
அதிலும் குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்து அதில் இசையுடன் சேர்த்து Status வைக்க விரும்பும் வகையிலான Status பிரியராக நீங்கள் இருந்தால் சொல்லவே தேவையில்லை.
இனி WhatsApp மூலம் நீங்கள் இசையுடன் சேர்ந்த Statusஐ வைத்துக்கொள்ள முடியும். Android மற்றும் IOS பீட்டா பாவனையாளர்களுக்கு தற்போது சோதனை முறையில் இருக்கும் இந்த வசதி விரைவிலேயே அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளது.
WAbetainfo-வின் அறிவிப்பின்படி அதிகாரபூர்வமாக இந்த வசதியை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, பீட்டா சோதனை முறையில் சில காலம் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இதில் ஏற்படும் பிரச்சினைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்த பின்னர் வழக்கமான பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.