நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் "தளபதி 69". இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே, பொபி டியோல், மமிதா பைஜு உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் October மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியல்வாதியாக களம் இறங்கியுள்ள தளபதி விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. ஆகவே, இத்திரைப்படத்தின் மீது இரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் குடியரசு தினமான நாளை 26 ஆம் திகதி 'தளபதி 69 ' திரைப்படத்தின் First Look வெளியாகுமென திரைப்படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
'தளபதி 69' திரைப்படத்திற்கு 'நாளைய தீர்ப்பு' என தலைப்பு வைக்க திரைப்படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்த செய்தி இரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.