இயற்கையில் விளைகின்ற பல பருப்பு வகைகள் எல்லாமே உடல்நலத்திற்குத் தேவையான பல சத்துக்களைக் கொண்டவைதான். அந்தவகையில், எல்லோரும் உண்ணக்கூடிய பாதாம் பருப்பில் (Almonds) எண்ணிலடங்கா பலசத்துக்கள் உள்ளன.
எமது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தரக்கூடியது இந்த பாதாம் பருப்பு. பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவதைவிட ஊறவைத்துச் சாப்பிடுவது எமது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.
இந்த ஊறவைத்த பாதாமில் காணப்படும் விற்றமின் B மற்றும் Folic அமிலம் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் பாதாம் சிறந்த தீர்வைத் தருகிறது.
மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், நீரிழிவு நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், பல் பாதுகாப்பு, இரத்தச் சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பையில் கல் உண்டாதல் போன்ற பிரச்சினைகளைக் குறைப்பதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
பாதாம் பருப்பை நாம் உண்பதால் தோலுக்கு அதிக பளபளப்பைத் தருகிறது. பாதாம் பருப்பை அதிகளவு உண்பவர்களுக்கு உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றல் கிடைக்கும்.
பாதாம் பருப்புகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டுவந்தால், அவர்களுக்கும், அவர்களது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நன்மையை அளிக்கும்.