இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "Train" என்ற திரைப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கின்றார். இந்தத் திரைப்படத்தின் அறிமுக வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.
இந்தத் திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கான இசையை இயக்குநர் மிஷ்கின் வழங்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்து திரைப்படக்குழு புதிய போஸ்டர் மற்றும் சிறப்பு glimps வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தத் திரைப்படம் குறித்த அடுத்தடுத்த updates விரைவில் வெளியாகும் எனவும் திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.