உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தும் கீரை வகைகளில் அகத்திக்கீரையும் ஒன்று.
ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்ட அகத்திக்கீரையின் வேர், இலை, பட்டை, பூ என்று சகல பாகங்களும் பயனுடையவை. அகத்திக் கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றுவதுடன் பித்த நோயைப் போக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் வல்லமை அகத்திக்கீரைக்கு உண்டு.
அகத்திக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உண்டு. அத்துடன் நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான உணவுகளில் முதன்மையானது.
அகத்திக் கீரையின் சாறை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி வீதம் அருந்தி வர ஒரு மாதத்தில் இருமல் சுகமடையும். அகத்திக்கீரையின் சாற்றில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த வயிற்று வலி தீரும்.
அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும் தடுக்கும்.
கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். அகத்திக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும்.
எனவே பல்வேறு ஆரோக்கியத்தைத் தரும் அகத்திக் கீரையை நமது அன்றாட உணவில் சேர்த்து உட்கொண்டு பலன் பெறுவோம்.