ஸ்மார்ட்போனில் எந்த ஒரு செயலியையும் தரவிறக்கம் செய்த பின் சில அனுமதிகள் கேட்கப்படும். எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் தொலைபேசியிலிருந்து செயலியை நீக்கினாலும், அந்தச் செயலிகள் தொடர்ந்து தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும்.
எந்தெந்த செயலிகள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கின்றன என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் சில படி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Settings இற்கு செல்லவும். அங்கு நீங்கள் Google Services ஐ தேர்ந்தெடுத்து உங்கள் Google கணக்கை நிர்வகிக்கும் பகுதிக்குச் செல்லவும். பின்னர் Data & Privacy இனை தேர்ந்தெடுக்கவும்.
கீழே நீங்கள் Web & App Activity என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். உங்கள் Google கணக்கை அணுகக்கூடிய Apps and Services பட்டியல் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
உங்கள் தொலைபேசியிலிருந்து நீங்கள் நீக்கிய செயலிகளும் உங்களுக்குத் தெரியும். அவற்றின் செயற்பாட்டை நீக்கவும். இதைச் செய்த பின்னர், அந்த App உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க முடியாது.
நீங்கள் செயலியை மட்டும் நீக்கிவிட்டு செயற்பாட்டை நீக்கவில்லை என்றால், செயலி உருவாக்குநர்கள் உங்கள் தனிப்பட்ட தரவை இன்னும் அணுகலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.